அனைத்து பாடசாலைகளில் மைத்திரி! திடீர் உத்தரவு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எம்.எல்.கம்மன்பில கடிதம் மூலம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தை காட்சிபடுத்தாத பாடசாலைகளில் உடனடியாக காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவி ஏற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் பாடசாலைகளினுள் ஜனாதிபதியின் புகைப்படங்கள் காட்சி படுத்தாமல் உள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தினால் 2017 -04-06 என்ற திகதியன்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட உதவி செயலாளர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்த கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலய கல்வி அலுவலகங்களுக்கு சொந்தமான பாடசாலைகளில் இதுவரையில் ஜனாதிபதியின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என்றால், தேவையான புகைப்படங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here