பொகவந்தலாவையில் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர்  தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்று  பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி பொகவந்தலாவ தர்மகீர்த்தி மத்திய மாகா வித்தியாலயத்தில்  கல்வி பயின்று வந்ததாகவும்   உயர் தரத்திற்கு தகுதி பெற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் எவரும் இல்லாத போதே குறித்த சிறுமி விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

விஷம் அருந்திய சிறுமியை சம்பவம் அறிந்தவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாளை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here