யானைக்கும் யானைக்கும் சண்டை! ஒரு யானை பரிதாபமாக உயிரிழப்பு

அநுராதபுரம் – மின்னேரியா தேசிய பூங்காவில் உள்ள இரண்டு யானைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த இரண்டு யானைகளும் நேற்று முன்தினம் கடுமையாக மோதிக்கொண்டுள்ளன. இதில் படுகாயமடைந்த யானை நேற்று உயிரிழந்துள்ளதாக பூங்காவின் உத்தியோகத்தர் மடுகலே குறிப்பிட்டுள்ளார்.

இரு யானைகளும் மோதிக்கொண்டு இருப்பதை வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வெடி வைத்து மோதலை தடுக்க முயன்றபோதும் அது வெற்றியளிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த மோதலில் ஒரு யானைக்கு கண் மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.

50 வயது மதிக்கத்தக்க 15 அடி உயரமுடைய யானையே இதில் உயிரிழந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here