விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் இன்றும் திடீர் அகழ்வு

விஸ்வமடுவில்  குற்றத்தடுப்புப்பிரிவால் இன்றும்   திடீர் அகழ்வு

வறக்காபொல  பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற  நபர் ஒருவர்  2009 பிற்  பகுதியில் விஸ்வமடுப் பகுதியில்  உள்ள  இராணுவ முகாம் ஒன்றில் வேலை செய்துள்ளார்  குறித்த நபர்  2010 ம்  ஆண்டு  இரண்டாம் மாதம் முதல் வீடு வந்து சேரவில்லை என அவரது மனைவியால் வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட  முறைப்பாட்டிற்கு அமைவாக  முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையிலே  மன்றின் அனுமதியுடன் மன்றின் நீதிபதி எம்.எஸ்.எம்  சம்சுதீன்  அவர்களின் முன்னிலையிலையே  இவ்  அகழ்வுப்பணி நடைபெற்றுள்ளது
குறித்த நபர்  2010  ம்  ஆண்டு காலப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு  அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டது எனவும் அவர் மீண்டும் வரவில்லை எனவும்   இராணுவத்தரப்பு  தெரிவிக்கின்ற நிலையில் குறித்த நபரை கொன்று  புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலையே குறித்த அகழ்வு இடம்பெற்றுள்ளது
இவ் அகழ்வானது இன்றுடன் நான்காவது தடவையாக நடைபெற்றுள்ள போதும் தடையங்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here