அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பணி நீக்கம்

அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் செனரத் திஸாநாயக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையே இவ்வாறு பணி நீக்கப்பட காரணமாகும்.

கொள்வனவு மற்றும் கட்டட நிர்மானங்கள் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பணிப்பாளர் நாயகத்தை பணி நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியாயவசம் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் செனரத் திஸாநாயக்க தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதன் போது குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால் பொருத்தமான ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்துமாறு அமைச்சரவை அலோசனை வழங்கியுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here