நாட்டின் முதலீடுகளை மேம்படுத்த விசேட செயலகம்

நாட்டின் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு விசேட செயலகம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முதலீடுகளை கொண்டு வரும் நிறுவனங்களுக்கு இடையில் இணைப்பினை ஏற்படுத்தும் நோக்கில் பத்து தொழில்நுட்ப செயலணிகள் உருவாக்கப்பட உள்ளன.

முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு இடையில் நிலவி வரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணிகளை செயலகமும் செயலணிகளும் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு நிகரான நாடுகள் மேற்கொண்டு வரும் முதலீட்டு ஊக்குவிப்பு தந்திரோபாயங்களை ஆராய்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here