களுத்துறையில் நீர் நிரம்பி வழியும் அபாயம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், களுத்துறை- பனாபிட்டிய அணை நிரம்பி வழியக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, களுத்துறை, வாதுவ மற்றும் பாணந்துறை மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை அறிவித்துள்ளது.

மேலும், வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 114,124 குடும்பங்களை சேர்ந்த 442,299 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here