28 ஆவது நாளாகவும் தொடரும் இரணைத்தீவு மக்களின் போராட்டம்

சொந்த ஊரை இழந்து விட்டு இங்கே நோயாளர்களாக இருக்கின்றோம். எனவே, எங்களை தமது சொந்த மண்ணுக்கு போக விடுங்கள் என கிளிநொச்சி இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது சொந்த இடத்தில் குடியேற அனுமதியை பெற்றுத்தருமாறு கோரி கிளிநொச்சி இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் 28 ஆவது நாளாக இன்றும்(28) தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நல்ல சுவாத்தியத்தோடு வாழ்ந்த நாங்கள், இன்று எங்கள் ஊரை இழந்து இங்கே நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

எங்கள் நிலத்தை எங்களிடம் தாருங்கள். எங்கள் ஊரில் இருந்து தான் பலர் பட்டதாரிகளாக இருக்கின்றனர். தொழில் வளமும் உள்ளன.

எங்கள் ஊர் செல்வ செழிப்பானது. எங்கள் ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசையுடன் நாங்கள் இருக்கின்றோம் என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here