அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு

நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளதுடன் 109 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ் அனர்த்தத்தில் சிக்கி 109 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் உடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here