அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வவுனியாவில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு

தென்னிலங்கையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் நாளை முதல் வவுனியா வர்த்தக சங்கத்தினால் சேகரிக்கப்படவுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் தமது வாழ்விடங்களை இழந்து வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கான உணவுப் பொருட்களை வவுனியா வர்த்தகர்களிடமிருந்து பெற்று புதன்கிழமை வவுனியா மாவட்ட செயலாரிடம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

எனவே அனைத்து வர்த்தகர்களும் தமது ஆதரவினை வழங்கி தென்னிலங்கை மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஒன்றிணையுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here