சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டுங்கள்!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்றைய தினம் (29) மாவட்ட செயலத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை சேகரிப்பதற்கான நிலையம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளதாவம், அங்கு சென்று தங்களது நிவாரணப் பொருட்களை பொது மக்களும் அமைப்புகளும் வழங்க முடியும் என்றும் அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

குறித்த பொருட்கள் வெள்ளிக்கிழமை காலை வரை சேகரிக்கப்பட்டு காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு செல்லப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன இணைந்ததாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், நிவாரணங்களை வழங்குபவர்கள் கலாநிதி எம்.இவர்ணகுலசிங்கம் – 0772681366, வி.பிரதீபன் 0776109222, எஸ்.மாமாங்கராஜா 0772662725 ஆகியோரைத் தொடர்புகொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர் பிரிவுகளினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களின் ஒருதொகுதி ஏற்கனவே மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஊடாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here