நான் எவனுக்கும் பயந்தவன் இல்லை! மிரட்டல் விடுத்த பிரதமரின் பிரதானி

பிரதமரின் சமூக வலைத்தள பிரதானியான துஷார வன்னி ஆராச்சி ஊடகவியலாளர் ஒருவரை மிரட்டும் ஆதாரம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

விமுக்தி என்ற ஊடகவியலாளலர் ஒருவரையே துஷார வன்னி ஆராச்சி தொலைபேசி அழைப்பினூடாக மிரட்டி உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தற்போது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் துஷார கூறுகையில்,

“விமுக்தி என்னைப்பற்றி உங்களுக்கு தெரியாது. நான் குடிப்பழக்கம் உள்ளவனா இல்லையா என்பது குறித்தும் உங்களுக்கு தெரியாது.

முகநூலிலும் கூட ஏதோ பதிவு ஒன்றை போட்டு இருக்கின்றீர்கள். முடிந்தால் என்னைப்பற்றி ஏதாவது செய்தியினை வெளியிட்டுப்பாருங்கள். ஆனால் ஒன்றைக் கூறுகின்றேன்.,

என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்தாலும் நீங்கள் மிகவும் வருந்த நேரிடும். இதுவரை எப்போதும் பார்த்திராத வகையில் என்னுடன் மோத வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த மோதலின் எல்லையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். என்னைப்பற்றி தெரியாது ஏதாவது செய்தி ஒன்றை எழுதினால் நல்ல பாடம் ஒன்றை கற்பிப்பேன்.

முடிந்தால் என்னைப் பற்றி செய்தியை வெளியிட்டுப்பாருங்கள். நான் யார் எனக் காட்டுகின்றேன். மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கின்றேன்.

எனக்கு இந்த வேலை முக்கியம் இல்லை, அதேபோன்று நான் எவனுக்கும் பயந்தவன் இல்லை, உங்களுக்கும் பயம் இல்லை என துஷார வன்னிஆராச்சி மிரட்டியமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த உரையாடல் தற்போது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here