ஹெலிகொப்டரினுள் குழந்தை பிரசவித்த இருபெண்களில் ஒருவரின் குழந்தை மரணம்.

அசாதாரண காலநிலையால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டடிருந்த ஹெலிகொப்டருக்குள் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாகவும், அதே ஹெலிகொப்டரில் மற்றொரு தாயிற்கு ஏற்பட்ட பிரசவ வலியை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் இரண்டு கர்ப்பிணிகளை மீட்டுச்செல்கையில், குறித்த ஹெலிகொப்டருக்குள் இருந்த கர்ப்பிணிப்பெண்ணாருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

இதேவேளை மற்றொரு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளநிலையில் ஹெலிகொப்டரில் பிரசவிக்க முடியாத நிலை ஏற்படவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பயிருந்த நிலையில், அவருக்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்தினப்புரியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக, சாலை வழி போக்குவரத்துகள் தடைபட்டுள்ள நிலையில், குறித்த இருபெண்களையும் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான அவசர அழைப்பு கிடைக்கப்பெற்ற நிலையிலேயே, அவர்கள் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படடுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here