ஆபத்திலிருந்து காப்பாற்ற மேல் மாடியில் இருந்து மகளை தூக்கி வீசிய தந்தை

ஆபத்தான நிலையில் பிள்ளையின் உயிரை காப்பாற்ற தந்தையொருவரின் செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கெக்கிராவ, கல்கிரியாகம பிரதேசத்திலுள்ள இரண்டு மாடி வர்த்தக நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கு இரண்டு ஊழியர்கள் கடுமையான தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்கரியாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீயில் சிக்கியமையினால் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த தீ சம்பவம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மகளுடன் மேல் மாடியில் இருந்த இந்த தம்பதியினர் தங்கள் மகளை காப்பாற்றுவதற்காக மேல் மாடியில் மகளை வீசி எறிந்துள்ளனர்.

எனினும் கீழே இருந்தவர்கள் குழந்தை பாதுகாப்பாக ஏந்தியமையால், அவர் எந்தவித உயிராபத்தும் இன்றி பாதுகாப்பாக உள்ளார்.

மேல் மாடியில் இருந்து கணவன் – மனைவி தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கீழே குதித்தமையினால் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் தீ சம்பவத்திற்கான காரணம் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here