இந்தியாவில் சிறுவனை அடித்துக் கொன்ற பொலிஸ்

தமிழ்நாட்டில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சிறுவனை பொலிஸ் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த தம்பதி துரைசாமி- சாந்தி, இவர்களது மகன் முகேஷ்(வயது 17).

திருட்டு வழக்கில் விசாரிப்பதாக கூறி காவல் ஆய்வாளர் சிவக்குமார் முகேஷை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அத்துடன் முகேஷ் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தையும் பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் தலைகீழாக கட்டி அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

வலிதாங்க முடியாமல் கதறிய முகேஷ், ஒரு கட்டத்தில் மயக்கமடைந்துள்ளார், உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உறவினர்கள் திரளவே இரவோடு இரவாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நள்ளிரவில் முகேசுக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை என மருத்துவர்கள் கூறியதுடன் முகேஷை அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

கனத்த இதயத்துடன் முகேஷை அழைத்து சென்ற போது, போகும் வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முகேஷின் உறவினர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here