இலங்கையிலிருந்து விலகிச் செல்லும் ஆபத்து!

இலங்கையில் தாக்கம் செலுத்திய மோரா சூறாவளி பங்களாதேஷ் நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் நிலவிய அடைமழை மற்றும் பலத்த காற்று நாளையதினம் முதல் குறைவடையும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இலங்கையின் வான்பரப்பில் கரு மேகங்கள் நிறைந்து காணப்படும். இதன்மூலம் இன்றைய தினம் மழையை எதிர்பார்க்க முடியும்.

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் விசேடமாக மத்திய மலை நாட்டில் 100 மில்லிமீற்றர் மேலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here