இலங்கையில் நாள் ஒன்றுக்கு புகைக்கப்படும் சிகரெட்டுகள் எத்தனை தெரியுமா?

இலங்iகையில் நாள் ஒன்றுக்கு 11 மில்லியன் சிகரட்டுகள் புகைக்கப்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டாக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை நேற்று குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரட் பயன்பாட்டினால் ஆண்டு தோறும் 20,000 பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழப்போரில் 10 வீதமானவர்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகாமையில் உள்ளவர்களாகும்.

சுமார் ஐந்து லட்சம் பேர் சிகரட் புகைப்பிடிக்கின்றார்கள், ஒருவர் அதிகளவில் சிகரட் புகைப்பதனால் நாள் ஒன்றுக்கு 11 மில்லியன் சிகரட்டுக்கள் புகைக்கின்றார்கள்.

புகைப்பிடிப்போரை அந்தப் பழக்கத்திலிருந்து முற்றுமுழுதாக விடுவிப்பது பெரும் சிரமமான காரியம் என டாக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here