இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு கோடி ரூபா நட்டம்

வெள்ளம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி முதல் இவ்வாறு நாள்தோறும் இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாட்டு முகாமையாளர் பீ.எச்.ஆர்.டீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கலாவனை, கொடகவல, இரத்தனபுரி போன்ற டிப்போக்களில் அதிகளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் டிப்போக்களின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here