உதவி செய்யச் சென்றவர் நீரில் மூழ்கி மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்யச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

களுத்துறை தெற்கு, சேருபிட்டிய பிரதேசத்தில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யச் சென்ற தெப்பமொன்று கவிழ்ந்ததிலேயே குறித்த நபர் காணாமல் போயுள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த அனர்த்தம் இடம்பெறும் போது பௌத்த பிக்கு ஒருவரும் சம்பவ இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேருபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

தெப்பம் கவிழ்ந்த போது அதில் பயணித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை அருகில் இருந்தவர்கள் மீட்ட போதிலும் நான்காம் நபர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவரை பொலிஸாரும் கடற்படையினரும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here