கோத்தபாயவின் தீர்க்கமான முடிவு!

தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, கோத்தபாய இந்த தகவலை வெளியிட்டார்.

அமெரிக்க – இலங்கை நாடுகளின் குடியுரிமையை கொண்டவராக கோத்தபாய காணப்படுகிறார்.

இந்நிலையில் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்வீர்களான என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது தொடர்பில் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லையென தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்றில் போட்டியிடும் எந்தவித எண்ணமும் தனக்கு இல்லையென்று கோத்தபாய தெரிவித்துள்ளார்.

2020ம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கோத்தபாயவின் இலக்காக உள்ளது. இது குறித்து கடந்த காலங்களில் பகிரங்கமாக கோத்தபாய அறிவித்திருந்தார்.

எனினும் இரட்டை குடியுரிமை கொண்ட எவரும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபாயவின் கனவு கலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here