தென்னிலங்கை மக்களுக்கு காரைதீவில் நிவாரணம் சேகரிப்பு

நாட்டின் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அம்பாறை அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காரைதீவுப் பிரதேசசெயலக உத்தியோகஸ்தர்கள் இன்று நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளனர்.

மேலும், நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலையால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்காலிக முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here