தெற்கிலோ மழையினால் பெரும் பாதிப்பு! வடக்கிலோ மழையின்றி பாதிப்பு!

தென் மாகாணத்தில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டு அழிவுகள் இடம்பெற்று வரும் நிலையில் வடக்கு மாகாணத்தில் கடுமையான வறட்சி நிலைமை நீடித்து வருகின்றது.

வடக்கிற்கு சில மாதங்களாக மழை கிடைக்காத காரணத்தினால் 130,243 குடும்பங்களைச் சேர்ந்த 440,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை வெள்ளத்தினால் ஐந்து இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வடக்கில் மழையின்றி 670 கிராம சேவைப் பிரிவுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஊடாக நீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யாவிட்டால் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here