மட்டக்களப்பில் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி

மட்டக்களப்பு செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் ஆக்கமும், கண்காட்சியும் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியக மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் வி.கயல்விழி மற்றும் ஏறாவூர்ப்பற்று முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சர்ஜூன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த கண்காட்சியில், செங்கலடி பிரதேச பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஆக்கப்பட்ட ஓவியங்கள் உட்பட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

காட்சிப்படுத்தல்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை உருவாக்கி மாணவர்களின் திறமைகளை அதிகரிக்கும் நோக்கிலேயே குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here