மதுவுக்கு அடிமையாகிய இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை

இந்தியாவில் கரூர் என்ற இடத்தில் இலங்கை அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கரூர் இராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 21 வயதுடைய ஜான்சன் என்பவரோ இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் அந்தோணிராஜ் என்பவரின் மகன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமை தூக்கும் தொழில் செய்து வந்த ஜான்சனுக்கும், அதே அகதிகள் முகாமைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஜான்சன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

அதிலிருந்து மீண்டுவர முடியாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் பசுபதிபாளையம் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here