வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவிருந்து மூன்றுமுறிப்பு பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் திரும்ப முற்பட்ட சமயத்தில் ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த அன்பியூலன்ஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் அன்பியூலன்ஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட அன்பியூலன்ஸ் வண்டி சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here