வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் குறுங்கால கற்கை நெறிகள் ஆரம்பம்

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் குறுங்கால கற்கை நெறிகள் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வவுனியா தொழிநுட்ப கல்லூரியின் அதிபர் இன்று உத்தியோக பூர்வமாக கூறியுள்ளார்.

ஏசி மெக்கானிக், வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள் திருத்துதல், மோட்டார் சைக்கிள் திருத்துதல், கள உதவியாளர் விவசாயம், கணிய அளவை உதவியாளர், வயரிங் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விண்ணப்பப்படிவங்களை வவுனியா தொழிநுட்ப கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் எதிர்வரும் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here