அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு அவுஸ்திரேலியா 75 மில்லியன் நிதியுதவி

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக அவுஸ்திரேலியா அரசாங்கம் 75 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.

தென்மேற்குப்பருவப் பெயர்ச்சி மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சர்வதேச நாடுகள் மனிதாபிமான ரீதியில் நிதியுதவி வழங்குமாறு அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கேற்ப பல்வேறு நாடுகளும் நிவாரணப் பொருட்களும், நிதியுதவிகளும் வழங்கி வரும் நிலையில் அவுஸ்திரேலியா அரசாங்கமும் 75 மில்லியன் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான மிதவைப் படகுகள், மீட்பு உபகரணங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்கான உபகரணங்கள் , மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு நிவாரண உதவிகள் இதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இயற்கை அனர்த்தம் தொடர்பில் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தி தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதாக அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here