அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது, புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார பிரதி அமைச்சராக செயற்பட்ட ஹர்ஷ டி சில்வா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சராக செயற்பட்ட எரான் விக்ரமரத்ன, நிதி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தொழில் முயற்சிகள் மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்பாசன இராஜாங்க அமைச்சராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக வசந்த சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயகவிற்கு மேலதிகமாக மலைநாட்டு மரபுரிமைகள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருணாரத்ன பரணவித்தாரன,தொழில் பயிற்சி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே,வெளிவிவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி அமைச்சரான லசந்த அழகியவன்ன,நிதி மற்றும் ஊடகத் துறை பிரதி அமைச்சரான நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here