கங்கையில் மரத்தை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிய மூன்று உயிர்கள்!

ஜின் கங்கையில் நீர் பெருக்கெடுத்த காரணத்தினால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்குவதற்கு இடமின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர்.

அந்த வகையில் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள மரத்தின் கிளைகளை பிடித்தவாறு மூன்று உயிர்கள் போராடிக்கொண்டு இருந்துள்ளார்கள்.

குறித்த மூவரையும் அவதானித்த மீட்புபணியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த இடத்திற்குச் சென்று அவர்களை காப்பற்றியுள்ளனர்.

இதன்போது இவர்களுடன் நாய் ஒன்றும் மரத்தின் கிளைகளை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடி உள்ளது. இந்த நாயையும் அவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மீ்ட்புக் குழுவினரை கண்டதும் இதில் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் கதறி அழுதுள்ளான். இதில் சிறுவன் ஒருவர், முதியவர் மற்றும் நாய் ஒன்றின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சிறுவன் பயத்தினால் அழுதுகொண்டு இருப்பதாகவும், முதியவர் மிகவும் பயந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு படகில் சிறுவனும், முதியவரும் சென்றுள்ள நிலையில் குறித்த படகு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

எனினும் சிறுவனும் முதியவரும், ஒரு நாயும் உயிரை காப்பாற்றுவதற்காக மரத்தின் கிளையில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here