நியூசிலாந்து பிரஜையை ஏமாற்றிய இலங்கையர்

வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு போலி மாணிக்க கற்களை விற்பனை செய்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 7 இல் வைத்து குறித்த சந்தேகநபரை சுற்றுலாப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நியூசிலாந்து நாட்டு பிரஜையை ஏமாற்றிய இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த வெளிநாட்டு பிரஜை,பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு போலி மாணிக்க கற்களை கடந்த டிசம்பர் மாதம் குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு பிரஜைக்கு விற்பனை செய்துள்ளார்.

போலி மாணிக்க கற்களை 2400 அமெரிக்க டொலருக்கு சந்தேகநபர் விற்பனை செய்துள்ளார்.

அதன் பின்னர், குறித்த வெளிநாட்டவர் ஹொங்கோங் சென்றுள்ளார். இதன் போது,அது போலி மாணிக்க கற்கள் என கண்டறிந்துள்ளார்.

வெளிநாட்டு பிரஜை மீண்டும் இந்த மாதம் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து, சுற்றுலாத் துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் போதே,சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here