முன்னாள் போராளிகள் 4 பேர் சமூகத்துடன் இணைவு

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் நான்கு பேர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்று (31) இடம்பெற்றுள்ளதுடன், இந்த நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையப் பயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க, சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன் சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிஸார், விமானப்படையினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற கிளிநொச்சியை சேர்ந்த சற்குணசிங்கம் தயாபரன் (வயது 44), யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னராசா துஷ்யந்தன் (வயது 35), ஒட்டுசுட்டானை சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் (வயது 37), பேலியகொடயை சேர்ந்த அஜித் ரோகண (வயது 48) ஆகிய நான்கு பேர் தங்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here