வாக்காளர் பட்டியல் பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு

காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் பெற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் மேலும் பத்து நாட்களுக்கு நீடிக்கப்படும்.

வாக்காளர் பட்டியல்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றை மீளப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவிருந்தது.

எனினும், சீரற்ற காலநிலையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதனால் இந்த நடவடிக்கையானது எதிர்வரும் 7ம், 8ம் திகதிகள் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்படும் என்ற காரணத்தினால் பாதிப்புக்கு உட்படாத பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியல்களை உரிய நேரத்தில் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here