ஆப்கானிஸ்தான் தாக்குதல் – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகத்திற்கு அருகே நேற்று  பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.  அத்துடன் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கழிவுநீர்த் தொட்டியின் கீழ் இருந்து சுமார் 1500 கிலோ எடையிலான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என்று ஆப்கான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஆப்கனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here