இலங்கையில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள நேபாளிகள்

நேபாள நாட்டவர்கள் பலர் இலங்கை சிறைகளில் தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் 17 நேபாளியர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதுடன், 43 பேர் ஆயுள் தண்டனையும் பெற்றுள்ளனர்.

அவர்களில் அதிகமானவர்கள் இலங்கைச் சிறைகளில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சரியான எண்ணிக்கை குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

மேலும், சவூதி அரேபியா, குவைத், கட்டார், தென்கொரியா, சீனா, தாய்லாந்து, பாகிஸ்தான், கொலம்பியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சிறைகளிலும் நேபாளியர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை, போதை மற்றும் ஆட் கடத்தல்கள், பாலியல் துஸ்பிரயோகங்கள் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு இந்த தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here