சம்பியன்ஸ் கிண்ண தொடரில் சிப் பொருத்தப்பட்ட துடுப்பாட்ட மட்டை!

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் சிப் பொருத்தப்பட்ட துடுப்பாட்ட மட்டை அறிமுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு அணியிலும் 3 துடுப்பாட்ட வீரர்கள் குறித்த துடுப்பாட்ட மட்டையை பயன்படுத்துவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

துடுப்பாட்ட மட்டையின் இயக்கம், துடுப்பாட்ட வீரரின் நகர்தல் ஆகியவை பற்றிய தரவுகளை குறித்த சிப் மூலம் சேகரித்து தங்கள் துடுப்பாட்டத்தை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம், தவறுகளை திருத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே இந்த முறைமை முதன்முறையாக அறிமுகப்படுத்தபடவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையானது, தனது தொழில்நுட்ப நட்புறவான இன்டெல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மைக்ரோ சிப்கள் துடுப்பாட்ட மட்டையின் கைப்பிடியில் பொருத்தப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் மட்டை சுழற்றிய விதம், துடுப்பெடுத்தாடும் போது மட்டையின் கோணங்கள் ஆகியவற்றை கணனியில் இட்டு மென்பொருள் மூலம் பிம்பங்களை தரவிறக்கம் செய்து ஆராயலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here