சுமந்திரன் படுகொலை சதித் திட்டம்! சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிரமுகர் கொலை முயற்சி தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து, அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதனால் ஏனைய கைதிகளுடன் சேர்க்காமல் தனியாக வைத்திருக்குமாறும், வேறு சிறைச்சாலைக்கு மாற்றவேண்டாம் எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கொழும்புத் தலைமை அலுவலகத்தால் மன்றுக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவும் நீதிவான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களின் உறவினர்களை சந்தித்து உரையாடுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here