பொலிஸார் தேடும் ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை தேரரின் சட்டத்தரணி, மேல்முறையீடு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தொடர்பான வழக்கு மேல்முறையீடு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது ஞானசார தேரர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் நீதிமன்றம் வராமைக்கான காரணத்தை சட்டத்தரணி நீதிமன்றில் வெளிப்படுத்தினார்.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்யும் வைத்திய அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை மீண்டும் எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்றில் ஆஜராக தவறிய கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எனினும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here