யாழ். வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது

யாழில் நடைபெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவர் தொடர்பாகவும் இந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், நேற்று திருச்சியில் கியூ கிளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில், யாழ். நகர்பகுதியைச் சேர்ந்த தேவா, டானியல் மற்றும் சன்னா உள்ளிட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதங்களில் யாழில் நடைபெற்ற மிகப்பெரிய கொலை, கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த பிரதான சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், நாட்டை விட்டுத் தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட மூவரும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here