85 வயது இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு மூன்று வருட சிறை!

இந்திய அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள மஹிலா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, வத்தலக்குண்டு மாவட்ட பகுதியில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே சந்தேகநபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு மாவட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்துவரும் பாண்டி என்ற 85 வயதுடைய இலங்கையருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2015 ஆம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மூன்று வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here