இலங்கை அரசாங்கம் புதிய முயற்சி! மகாவலி ஆற்றின் நீர் வடக்கு செல்லுமா?

வடக்கு மாகாணத்திற்கு மகாவலி கங்கையின் ஆற்று நீரினை கொண்டு செல்வது சாத்தியமா என்பது குறித்ததான ஆய்வினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சின் செயலர் உதய செனிவிரத்ன,

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அரசாங்கம் இந்த சாத்திய ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

மொரகஹகந்த அணைக்கட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. களுகங்கை நீர்த்தேக்கத்தை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும்.

இந்த திட்டங்களின மூலம் நீரை வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம், இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும்.

அத்துடன், 85 ஆயிரம் ஏக்கரில் அபிவிருத்தி வலயம் ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கவுள்ளது.

இதேவேளை, களு கங்கையுடன் மொரகஹகந்த நீர்த்தேக்கம், கால்வாய் மூலம் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here