உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபையினால், சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றாடல் விழிப்புணர்வு சார்ந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விழிப்புணர்வு செயற்பாடுகளின் ஒரு அங்கமாக யாழ். கோண்டாவிலுள்ள நல்லூர் பிரதேச சபைக்கான திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இன்று காலை மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜனின் நெறிப்படுத்தலில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.திலகேந்திரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்துள்ளனர்.

மரநடுகை நிகழ்வு தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.திலகேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த திங்கட்கிழமை முதல் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் இன்றைய தினம் ‘பசுமையான சுற்றுச் சூழலைப் பேணி மக்களை இயற்கையுடன் இணைப்போம்’ எனும் தொனிப் பொருளில் மரநடுகை திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இங்கு கோண்டாவிலுள்ள இயற்கைப் பசளை நிலையத்தில் பயன்தரு மரங்களை எமது பிரதேச சபையின் செயலாளரின் நெறிப்படுத்தலில் அனைவரும் இணைந்து நடுகை செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here