சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க வேண்டும்

சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், மதச்சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவர்களுடன், சர்வதேச நெருக்கடி குழுவும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.

தெவட்டகா பள்ளிவாசலில் முஸ்லிம் சமூகத்தினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்குப் பின்னர் பள்ளிவாசல் மீதான பெற்றோல் குண்டு வீச்சு உள்ளிட்ட, முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் 17 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தாக்குதல்களை பொதுபலசேனா போன்ற அடிப்படைவாத அமைப்புகளே நடத்தி இருப்பதாக முஸ்லிம்களின் தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை செவிமடுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், இவ்வாறான வன்முறையாளர்களுக்கு எதிராக சட்டம் ஒழுங்குகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here