நாமல் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் இரண்டு அதிகாரிகளிடம் 200 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த அடிப்படை எதிர்ப்பை நிராகரித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சமத் மதநாயக்க வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க செய்திருந்த அடிப்படையற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்ததாக நாமல் ராஜபக்ச தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னை கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும் இதற்கு இழப்பீடாக 200 மில்லியன் ரூபா வழங்க வேண்டும் என நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here