நிதியமைச்சின் செயலாளர் ஊடகத்துறை அமைச்சுக்கு மாற்றம்

புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நிதியமைச்சின் செயலாளராக கடமையாற்றிய கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கான புதிய நியமனம் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை என ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றிய நிமல் போபகே தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் சமரதுங்க, புதிய ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுடன் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகிறார் என போபகே குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களின் தனக்கான புதிய நியமனம் வழங்கப்படும் எனவும் போபகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here