போரின் வடுக்களை சுமந்து நோர்வேயில் சாதனை படைத்த ஈழப் பெண்

போரின் வடுக்களை சுமந்து கொண்டு புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ள ஈழத் தமிழர்கள், பார் போற்றும் நபர்களாக மாறி வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு நோர்வேயில் வாழ்ந்து வரும் ஹம்சிக்கா பிரேம்குமார் என்ற ஈழப் பெண் தனது வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

”இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது 1993ஆம் ஆண்டு நான் பிறந்தேன். எனது அப்பா சாவகச்சேரியை சேர்ந்தவர். அம்மா புன்னாலைக்கட்டுவன் கிராமத்தை சேர்ந்தவர்.

ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கும் போது எவ்வாறு அனைவராலும் வரவேற்கப்படுகின்றதோ, அதேபோன்று தான் நானும் வரவேற்கப்பட்டேன்.. ஆனால் வேறு வழியில்,

நான் பிறக்கும் போது மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றிலிருந்து எவ்வாறு உயிர் தப்புவது என்ற கவலைகளும் எண்ணங்களும் என்னை பெற்றவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.

யுத்தத்தின் போது 1 லட்சம் பேர் உயிரிழந்தனர். அவர்களில் என்னுடைய அப்பாவும் உள்ளடங்குவார். எனவே எனது அம்மா என் இரு மூத்த சகோதரர்களுடன் இலங்கையை விட்டு வெளியேறினார்.

ஒரு நாள் எனக்கு நினைவிலிருக்கின்றது, “நான் பாடசாலை முடித்து வந்தேன். இரவு உணவு உண்பதற்காக எனது குடும்பத்துடன் தயாராகினோம். திடீரென ஓடி வந்த என் அம்மா, கையை இருக்கமாக பிடித்துக் கொண்டு நாற்காலிக்கு அடியில் எங்களை தள்ளினார். அப்பொது தான் புரிந்துக் கொண்டேன் அச்சம்என்றால் என்ன என்பது பற்றி.

குழந்தைகள் அழுகின்றன, முதியவர்கள்,கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.

யுத்தம் எங்களுக்கு எவ்வித சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை. எனவே நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தோம். தற்போது நாம் அதிஸ்டமானவர்கள் என நான் உணர்கின்றேன்.

2001 ஆம் ஆண்டு எனது அம்மாவுடன் நான் நோர்வேயிற்கு அகதியாக வந்தேன். எங்கள் இருவருக்கும் தெரியாத நாடாகவே நோர்வே இருந்தது. உணவு மொழி என்பவற்றிலிருந்து முற்றிலுமே வேறுபட்டு இருந்தோம்.

இருந்தாலும், உயிர் அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பாக நிம்மதியாக இருந்தோம். பல வருடங்களுக்கு பிறகு முதல் தடவையாக நிம்மதியாக உறங்கினோம்.

அதே சமயம் எனது எட்டு வயதில் என் தந்தையை இழந்தேன். என் உடன்பிறந்தோருடன் சேர்ந்து வளர முடியாது என்ற பயம். ஆனால் நோர்வே எங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை கொடுத்தது.

மற்றவர்கள் போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைத்தது. கல்வி பெறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அகதியாக வருகை தந்த நான் எனது வாழ்க்கையை கருத்திற்கொண்டு, அகதிகள் தொடர்பில் அறிந்து கொள்ள நினைத்தேன்.

அவர்களைச் சென்று பார்த்தேன். இன்னல்களுக்கு மத்தியில் வாழும் சிறுவர்கள் மற்றும் போர்வையின்றி, பாதணிகளின்றி இருக்கும் சிறுவர்களை பார்த்தேன்.

அவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தவர்கள். தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலையில் வந்தவர்கள்.

அவர்களின் குடும்பத்தினர். எம்மை போல ஒரு சாதாரண வாழ்க்கையை விரும்புபவர்கள். தயவுசெய்து அவர்களை அகதிகள் என்று கருதாதீர்கள், மனிதர்களாக அவர்களைப் பாருங்கள்

உங்களால் உலகத்தை மாற்ற முடியாது, ஆனால் நீ உலகத்தை மாற்றியமைப்பாய், என்னைப் போல் சிலரும் இவ்வாறு உலகை மாற்றியமைப்பார்கள்” என உணர்வுபூர்வமாக குறித்த ஈழப் பெண் தனது வாழ்க்கை அனுபவம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த ஈழப் பெண், தற்போது மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வருவதுடன், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

மேலும், பெர்கன் செஞ்சிலுவை அமைப்பு, நோர்வே புற்றுநோய் சமுதாயம், மற்றும் SOS குழந்தைகளின் கிராமங்கள் போன்ற பல்வேறு தன்னார்வ நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here