மன்னாரில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மன்னார் மாவட்ட செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று காலை காலி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பலரும் தமது உடமைகளை இழந்து, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேசச் செயலகங்களினூடாக கிராமங்களில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் நேற்று மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட பொருட்களே காலி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here