மாணவனை தாக்கிய ஆசிரியரை பணி நீக்கம் செய்யுங்கள். மாணவர்கள் ஆதங்கம்

வவுனியா கனகராயன்குளத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட மாணவன் தர்மராசா ஜனார்த்தனனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்று வருகின்றது.

மாணவனின் இழப்பால் பாடசாலைச் சூழலில் அவ்வப்போது பதற்ற நிலை ஏற்படுவதோடு, இறுதிச் சடங்கு நடைபெறும் பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் மாணவர்களின் முன்பாக ஆசிரியர் தாக்கியதால் மனமுடைந்துபோன குறித்த மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை கனகராயன்குளம் பாடசாலையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதான பணியின் போது தரம் 10 மாணவர்களுக்கும், உயர்தர மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த முரண்பாட்டின்போது ஆசிரியர் மாணவனை தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கருத்து கேட்டபோது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவனின் மரணத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படும் ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாணவனின் இறுதி அஞ்சலி நிகழ்விற்காக மாணவர்கள் பாடசாலையிலிருந்து வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here