முல்லைத்தீவு அணிஞ்சியன்குளம் கலவன் பாடசாலையின் கட்டடத் திறப்பு விழா

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் கல்வி வலயத்தின் அணிஞ்சியன்குளம் தமிழ் கலவன் வித்தியாலயத்தின் புதிய கட்டத்திறப்பு விழா கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த கட்டடத்தினை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் திறந்து வைத்தார்.

பாடசாலையின் அதிபர் கீதா பாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்வரத்தினம் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பெற்றோர், பாடசாலை முதல்வர், ஆசிரியர் ஆகியோர் பாடசாலையின் விளையாட்டுத்திடல் திருத்தம் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனோடு கலந்துரையாடியிருந்தனர்.

அதற்கமைய பாடசாலையின் வளர்ச்சிக்காக அடுத்த வருடம் தனது நிதி ஒதுக்கீட்டில் இரண்டு இலட்சம் ரூபா பாடசாலையின் வளர்ச்சிக்காக கையளிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here