மூன்று சிறுமிகள் வன்புணர்வு சம்பவம்: 32 பாடசாலைகள் இயங்கவில்லை

மூதூர் பெரியவெளிக் கிராமத்தில் சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் 32 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காது இன்றும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மூதூர் கோட்டத்தில் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும், ஈச்சிலம்பற்றுக் கோட்டத்தில் 18 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களும் ஆசிரியர்களும் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலரால் குறித்த சிறுமிகள் கடந்த 28 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here