மைத்திரியாக மாறிய தஹாம் சிறிசேன!

இலங்கையில் பேரனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் விஜயம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட, ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, இரத்தினபுரி அயகம பிரதேசத்திற்கு தஹாம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசியமான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கியுள்ளார்.

அயகம விகாரையில் தங்கியிருக்கும் மக்களை தேடி சென்ற தஹாம் சிறிசேன, மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் அந்த மக்களுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.

இங்கு பிரதேச மக்கள் தாங்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடி தொடர்பில் தஹாம் சிறிசேனவிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தங்கள் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்டகாலமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு தாம் முகம் கொடுப்பதாகவும், எந்தவொரு அதிகாரியும் இது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது ஜனாதிபதி தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அமைச்சர்கள் வருகை தராத அந்த பகுதிக்கு ஜனாதிபதியின் மகன் வருகை தந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக அந்த பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here